Home செய்திகள் மாநில அளவிலான இரண்டுநாள் அறிவியல் கண்காட்சி

மாநில அளவிலான இரண்டுநாள் அறிவியல் கண்காட்சி

by mohan

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் முதுகலை அறிவியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறைசார்பாக மாநில அளவிலான இரண்டுநாள் அறிவியல் கண்காட்சியை  இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையின் விஞ்ஞானியும்,அறிவியல் தமிழ் எழுத்தாளருமான நெல்லை.சு.முத்து கண்காட்சியை தொடக்கயுரையாற்றிதொடக்கிவைத்தார்.இவ்வுரையில்,திருகுறளில் உள்ள அறிவியல் நுட்பங்களை எடுத்துக்கூறினார்.மேலும் அறிவியல் புனிதமானது,தொழிட்நுபம் தூய்மையானது என்றும்,எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் வரவேற்கப்படவேண்டியவை எனவும்,நமது தேசம் வல்லரசாக விழாவில் பங்கேற்ற அனைவரையும்,கலாமின் ஐந்து கட்டளைகள் சொல்லி உறுதிமொழி ஏற்கவைத்தார்.மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் கடந்த 30 ஆண்டுகால இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சியையும்,சாதனையையும் பட்டியலிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடி மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாகவும்,தெளிவாகவும் பதில் அளித்தார்.

மூன்றாவது அமர்வில்,மிககுறைந்த வயதில் NASA மற்றும் ISRO  மூலமாக தொடர்ந்து மிகச்சிறியளவிலான 3-D செயற்கைகோள்களை செலுத்திவரும் space kids India அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் ” யாக்னா சாய்” செயற்கைகோள் உருவாக்க தொழில்நுட்பத்தினை விளக்கமாக எடுத்துரைத்தார்.முன்னதாக இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.A.R.பொன்பெரியசாமி வரவேற்புரையும்,கல்லூரி குழுத்தலைவர்.பொறியாளர்.பொன்.பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பேராசிரியர்.K.நாகராஜன்,இயற்பியல் துறைத்தலைவர் நன்றியுரை வழங்கினார்.கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கபிலன் மற்றும் இரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!