Home செய்திகள் மாங்கன்று வழங்கி மணமக்கள் மகிழ்ச்சி..!

மாங்கன்று வழங்கி மணமக்கள் மகிழ்ச்சி..!

by mohan

யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட பயன்தரும் மரங்களை மீண்டும் உருவாக்கும் விதமாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் மாங்கன்று வழங்கிய நிகழ்வு, கலந்து கொண்டவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.பொதுவாக, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, திருமண வீட்டார் சார்பில் நன்றி தெரிவித்து தேங்காய், பழம் அடங்கிய தாம்பூல பை மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம்.

ஆனால், இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், புது மணத் தம்பதியினரால் வழங்கப்பட்ட மாங்கன்றும், வழங்கி ய தற்கான காரணமும் திருமணத்தில் கலந்து கொண்டோரின் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது.இதுகுறித்த விவரம் வருமாறு; இலங்கையின் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த ரோஷன் வீரராஜன் – ரோஷாந்தி மாசிலா மணி ஆகியோரின் திருமண வைபவம், யாழ்ப்பாணத்திலுள்ள டில்கோ ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், உற வினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து நடைபெற்ற அறுசுவை விருந்து உபசரிப்பிற்கு பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமக்கள் மாங்கன்றுகளை பரிசாகவழங்கினர். இதுகுறித்து புதுமணத் தம்பதியினர் கூறுகையில், “கடந்த 30 வருட யுத்தத்தின்போது இலங்கையில் பல பயன்தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.தற்போதும், காடழித்தல் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளால் பல்வேறு இடங்களில் ஏராள மான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், எமது சூழலின் சமநிலை பாதிக்கப்படுவதுடன் புவி வெப்பமயமாதல், மழைப் பொழிவு குறைவு போன்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. மேலும், எங்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இவ்வாறான நிலைமைகளை கருத்தில்கொண்டு, எங்கள் திருமணத்தை முன்னிட்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதையடுத்து, மரக்கன்றுகளை வழங்கி னால் சிறப்பாக இருக்கும் என நினைத்து, எங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்று வழங்கினோம். குறிப்பாக இதில் மாங்கன்றுகளை வழங்கியதன் நோக்கம் என்னவென்றால், அனைவருடைய வாழ்வும் மாங்கனியைப் போன்று இனிமையாகவும் சுவையாகவும் மற்றவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையிலும் அமைய வேண்டும் என்பத ற்காகவே” என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். புதுமணத் தம்பதியரின் இந்தச் செயலும், அதற்கான காரணமும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதார ணம் என்றபோதிலும், இலங்கையைப் பொருத்தவரை இது போன்ற மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அரிதாகவே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!