Home செய்திகள் விண்ணமங்கலம்-குடியாத்தத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில் நேரம் மாற்றம்..

விண்ணமங்கலம்-குடியாத்தத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில் நேரம் மாற்றம்..

by ஆசிரியர்

விண்ணமங்கலம்-குடியாத்தத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பெங்களூரு, மைசூரு, எர்ணாகுளம், ஆலப்புழா உள்பட ஜோலார்பேட்டை மார்க்கம் வழியாக சென்னை, காட்பாடி வரும் அனைத்து ரயில்களும் 15 நிமிடம் முதல் 195 நிமிடம் வரை வரும் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். அதன் பிறகு ஒவ்வொரு ரயிலாக இலக்கை நோக்கி புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை வழிதடத்தில் விண்ணமங்கலம் – குடியாத்தம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை பல ரயில்கள் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

மே 21ம் தேதி: கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் டபுள் டக்கர் ஏசி விரைவு ரயில் (22626) மேல்பட்டி ரயில் நிலையத்தில் 80 நிமிடமும், ஆலப்புழா – தான்பாத் (13352) விரைவு ரயில் பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் 65 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) ஆம்பூர் ரயில் நிலையத்தில் 60 நிமிடமும், மைசூரு – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் (12008 ) விண்ணமங்கலத்தில் 15 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

மே 22ம் தேதி: கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் டபுள் டக்கர் ஏசி விரைவு ரயில் (22626) மேல்பட்டி ரயில் நிலையத்தில் 80 நிமிடமும், ஆலப்புழா – தான்பாத் (13352) விரைவு ரயில் பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் 65 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) ஆம்பூர் ரயில் நிலையத்தில் 60 நிமிடமும், எர்ணாகுளம் – பிலாஸ்பூர் (22816) விரைவு ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலைத்தில் 35 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

மே 23 மற்றும் 24: கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் டபுள் டக்கர் ஏசி விரைவு ரயில் (22626) வளத்தூர் ரயில் நிலையத்தில் 75 நிமிடமும், ஆலப்புழா – தான்பாத் (13352) விரைவு ரயில் மேல்பட்டி ரயில் நிலையத்தில் 75 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் (12640) பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் 60 நிமிடமும், மைசூரு – சென்டரல் சதாப்தி விரைவு ரயில் (12008 ) ஆம்பூர் ரயில் நிலையத்தில் 20 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

மே 25: கேஎஸ்ஆர் பெங்களூரு – அரக்கோணம் பயணிகள் ரயில் ஜோலார்பேட்டை – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மைசூரு – தர்பங்கா விரைவு ரயில் (12578) வளத்தூர் ரயில் நிலையத்தில் 195 நிமிடமும் , கேஎஸ்ஆர் பெங்களூரு – காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில் (17209) மேல்பட்டியில் 100 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும்.

மே 26: கேஎஸ்ஆர் பெங்களூரு – அரக்கோணம் பயணிகள் ரயில் ஜோலார் பேட்டை – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும். யஸ்வந்த்பூர் – ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) வளத்தூர் ரயில் நிலையத்தில் 130 நிமிடமும், கேஎஸ்ஆர் பெங்களூரு – காக்கிநாடா துறைமுகம் விரைவு ரயில் (17209) மேல்பட்டியில் 100 நிமிடமும், ஹவுரா – யஸ்வந்பூர் துரந்தோ விரைவு ரயில் (12245) காவனூர் ரயில் நிலையத்தில் 230 நிமிடமும், சென்ட்ரல் – மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் லத்தேரி ரயில் நிலையத்தில் 130 நிமிடமும் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்துக்கு: வெகுதூரத்தில் இருந்து சென்னை, காட்பாடி வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 15 நிமிடம் முதல் 195 நிமிடம் வரை மதியம் முதல் மாலை வரை நிறுத்தி ைவக்கப்படும். எனவே, குடிநீர், உணவு, பிஸ்கெட், மருந்து மாத்திரைகளை பத்திரமாக எடுத்து வைத்து கொள்வது நலம். காரணம் அதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளதால் பயணிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் வாய்ப்பு உள்ளதாக ரயில் பயணிகள் சிலர் தெரிவித்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!