
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் அருகே உள்ள சரவண பொய்கையில் போதிய ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் மீன்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது மேலும் பக்தர்கள், பொது மக்கள் குளிக்கும்போது பலர் அதில் சிக்கி உயிர் இழப்பும் ஏற்படுகிறது., மற்றும் பொதுமக்கள் துணி துவைப்பதற்கு தடைவிதித்து மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட குளியலறை, மற்றும் சரவண பொய்கையை மேம்படுத்த வும் கலெக்டர் அனீஸ்சேகர் மற்றும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி விஞ்ஞானி டேனியல் செல்லபா ஆய்வு செய்தனர். எம். எல்.ஏ. கோ.தளபதி கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி, பொறியாளர் முருகானந்தம், ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக இப் பணியானது மேற்கொண்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி ஆராய்ச்சியாளர் டேனியல் செல்லப்பா உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசிற்கும் ஒரு அறிக்கையை கொடுக்க வேண்டுமென விரைவில் சரவண பொய்கையில் உள்ள நீரை மீன்கள் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றி ஆக்சிஜன் அளவைக் கூட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது ஆட்சிகள் மாறிவிட்டது காட்சிகள் மாறுமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.