
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு, வடக்கு) மாவட்டம் சார்பாக ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மார் அரசை கண்டித்து 22.09.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 4:30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன கூட்டத்தில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் சகோ.தினாஜ்கான் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு, வடக்கு) மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கண்டன உரையை கோவை R.ரஹ்மத்துல்லாஹ் நிகழ்த்தினார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இரமநாதபுரம் (வடக்கு) மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா அவர்கள் நன்றியுரையாற்றினார்.
You must be logged in to post a comment.