Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் 14.7.2019 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார செயல்திட்டத்தை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

சுமார் 200 கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் இ.பாரூக் (மாநில செயலாளர்) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட துணைத்தலைவர் பசீர் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி,மாவட்ட துணைச்செயலாளர்கள் தினாஜ்கான், நசுருதீன்,ந சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச்செயலாளர் இபுறாகிம் நன்றியுரையாற்றினார்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.மாட்டிறைச்சியின் பெயரால் கொடூரத் தாக்குதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். மதச்சார்பின்னையையும் ஜனநாயகத்தையும் பன்னெடும் காலமாக பேசி வந்த இந்திய நாட்டில் மாடுகளின் பெயரால், ஜெய் ஸ்ரீராம் பெயரால், சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்கி கொல்லும் நிகழ்வுகள் தொடர்ந்தும் அதிகரித்தும் வருகின்றது. இதன் காரணமாக சமீபத்தில் ஜார்கண்டில் இளைஞர் தப்ரேஸ் அன்சாரி மற்றும் கொலை செய்யப்பட்டது பன்முகம் கொண்ட ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல. இதனை தடுத்து நிறுத்தும் வண்ணம் பசு குண்டர்களை தண்டிக்க கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

2.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வியிலும் வேளைவாய்ப்பிலும் மிகவும் பிந்தங்கி உள்ளனர் என ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் அறிக்கைகளும், அவர்களின் பரிந்துரைகளும் பறைசாற்றுகின்றன. இதற்கு தீர்வாக முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேளைவாய்ப்பிலும் 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பரிந்துரை செய்ய்யப்பட்ட போதும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. இந்நிலையில் ஏற்கனவே கல்வியிலும் வேளைவாய்ப்பிலும் தங்கள் சதவிகிதத்தை விட கூடுதலாக பயணடைந்து வரும் உயர்ஜாதியினருக்காக 10 % இடஒதுக்கீடுக்காக சட்டம் இயற்ற முனைப்பு காட்டி வருவது நியாயமானதல்ல. எனவே, முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10 % இடஒதுக்கீடை அமல்பபடுத்த மத்திய அரசு வழிவகை செய்ய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3.உலகெங்கும் தற்போது வன்முறை சம்பவங்கள்,தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது.அத்தகைய செயல்களை உலகத்திலிருந்து துடைத்தெறியும் விதமாக தீவிரவாததிற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் ஒன்றை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு நாடெங்கும் செய்வது என்கிற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பை முன்னெடுத்து இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முழுதும் இப்பிரச்சாரத்தை, துண்டு பிரசுரம், பேணர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், கூட்டங்கள், பெண்கள் பயான ஆகிய தளங்களில் முழுவீச்சில் செயல்படுத்துவது எனவும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

4.நாகப்பட்டினம் மாவட்டம் புரவச்சேரி கிராமத்தை சேர்ந்த முஹம்மது பைசான் 9.7.2019 அன்று மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டார் என்பதை காரணம் காட்டி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நான்கு ரவுடிகள் அவர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அந்த ரவுடிகளின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக அரசை இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

5.இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிப்கப்படுவதும் அப்படி துண்டிக்கப்பட்ட மின்சாரம் நாள்கணக்கில் மீண்டும் வராமல் போவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் குழந்தைகள்,முதியவர்கள் நோயாளிகள் உள்ளிட்டவர்கள் சிரமப்படுகின்றனர்.இத்தகைய மின்வெட்டை வண்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய மின்வெட்டு மீண்டும் தொடராமல் இருக்கவேண்டும் என மின்சார வாரியத்தை இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். அப்படி தொடரும்பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

6.இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது.

இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.மாணவர்களின் வாழ்வை சீரழிப்பதோடு இந்த கஞ்சாவிற்பனை செய்வது யார்? என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.இதுவரை கீழக்கரையில் 3 உயிர்கள் கஞ்சா என்ற போதைப்பொருளால் பலியாகி உள்ளது வருத்தத்தை அளிக்கிறது.இதுபோன்ற உயிர்பலிகள் தொடராத வண்ணம் கஞ்சா விற்பனையை அடியோடு ஒழித்துக்கட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com