“உழைப்பாளர்களுடன் கலந்துரையாடல்” – தவ்ஹீத் ஜமாத் மே தின சிறப்பு நிகழ்ச்சி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளையின் சார்பில் 1.5.2017 செவ்வாய்கிழமை உழைப்பாளர் தினத்தன்று “உழைப்பாளர்களுடன் கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதர,சகோரிகளான துப்புரவுப்பணியாளர்களை அழைத்து இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையில் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்ற கேள்வி- பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

இதில் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்ட மாநில செயலாளர் இ.பாரூக் அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டார்கள் அதில் 25 நபர்களுக்கு விருப்பத்தின் பேரில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்து கீழக்கரை தெற்குகிளை தலைவர் பதுருஜமான் அவர்கள் கூறியதாவது, “துப்புரவுபணி என்பது அது ஒரு தொழிலே தவிர பிறப்பின் அடிப்படையில் இல்லை வெளிநாடுகளில் உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களும் இந்த பணியை செய்கிறார்கள் அங்கு அவர்கள் உழைப்பாளர்களாக பார்க்கப்படுவதோடு கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள். அத்துடன் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அடியோடு ஒழித்து கட்டியுள்ளதையும் அனைவரும் ஒரு தாய்,தந்தையிலிருந்தான் பிறந்தோம் என்பதை உலகிற்கு பறைசாற்றும் முகமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறினார்.

சமூக நல்லிணக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதாக அமைந்த இந்நிகழ்ச்சி கிளை துணை செயலாளர் சித்தீக் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் இக்ரமுல்லாஹ், துணைத்தலைவர், ஜகுபர்சாதிக் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.