Home அறிவிப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..

by ஆசிரியர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 23/2017 ன் படி தொகுதி 4 ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது. அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிபணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த தேர்வுக்கென சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி 16.08.2018 முதல் 30.08.2018 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக இன சுழற்சி அடிப்படையில் எந்தெந்த வகுப்பினருக்கு துறைவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு அதற்குறிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.2018 அன்று தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30.08.2018 முதல் 18.09.2018 வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இச்சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரகள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குறிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதை குறிப்பிட்டு தேர்வுக்கட்டுப்பாடு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்புகொள்ளலாம்.

இரா. சுதன், இ.ஆ.ப.,

தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்

தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!