அமீரகம் வருகை தந்த தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது…

தமிழகத்தின் திருவறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மாநில துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த வாரம் அமீரகம் வருகை தந்திருந்தார். அவரின் வருகையை முன்னிட்டு அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் சோஷியல் சென்டர் (ISC) தலைவர் நரேஷ் சூரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரஸல் முஹம்மத் ஸாலிஹ் முன்னிலை வகித்து, வரவேற்புரையாற்றினார்.

நகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்பாடுகள் பற்றி இலக்கியச் செயலாளர் ஜிதேஷ் புருஷோத்தமன், அல்அய்ன் தமிழ்க்குடும்பத் தலைவர் முபாரக் முஸ்தஃபா மற்றும் துரைராஜ் ராஜவேல், சலீம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பலர் பாராட்டிப் பேசினர். அவர் இளம் வயதிலேயே தம் சட்டசபை செயல்பாடுகளையும், அரசியல் வாழ்வையும் திறம்பட அமைத்துக் கொண்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பல நம்பிக்கைக்குரிய இளைஞர்களில் ஒருவராக திகழ்கிறார் என்றுப் பாராட்டி பேசினார்கள்.

பின்னர் ஏற்புரையாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, இந்திய அரசாங்கத்திடம் ISC வைத்துள்ள பொருளாதார உதவி சம்பந்தமான கோரிக்கைகளை திமுக செயல்தலைவர் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதைப் பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார்.

மேலும் நிகழ்வின் முக்கிய பகுதியாக, ISC அலுவலகத்திற்கு வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை கெளவரவப் படுத்தும் விதமாக ISC செயலாளர் இருக்கையில் அமர வைத்து சிறப்பு விருந்தினர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு கௌவரப்படுத்தினார்.

40 வருட காலமாக இயங்கிவரும், இந்தியாவின் அனைத்து மாநிலத்தையும் சேர்ந்த உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ISC யில், தமிழ்நாட்டைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பளிக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும்.

நிகழ்ச்சியின் இறுதியில் ISC பொழுதுபோக்கு துறை துணைச்செயலாளர் அப்துல் ஜலீல் நன்றியுரையாற்றினார்.

http://keelainews.com/2017/04/12/political-program/