Home செய்திகள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்கு மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யாததும் வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது:-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்கு மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யாததும் வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது:-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..

by Askar

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்கு மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யாததும் வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது:-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு..

தமிழக நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான இரண்டாம் அமர்வு 08.03.2020 முதல் அந்தந்த துறைவாரியாக நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக நேற்று (12.03.2020) பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைக்கான விவதாம் நடந்தது, விவாத்த்திற்கு பின்னர் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் 36 அறிவிப்புகளை அறிவித்தார் குறிப்பாக 1575 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை முதுகளை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும் என்பது வரவேற்கத்தக்கது

மேலும் பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் எளிதில் கிழக்காத நீராலும் சேதமடையாத வகையில் செயற்கை இழையிலான மேம்டுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வரவேற்க தக்கது,,இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த குறைத்தீர் கற்றல் பயிற்சி புத்தகம் வழகப்படும் என்பது வரவேற்க கூடியது

அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் அலுவலகப் பணிகள் தொய்வு ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது, மேலும் மாணவர்கள் சிறப்பு பிரிவிகளில் தன்திறனை மேம்படுத்மிக் கொள்ள ஓவியம் இசை தையல் கணினி போன்ற பாடப்பிரிவுகளுக்காக தற்போதய சூழ்நிலைக்கு ஏற்ப கற்றலுக்கான தேவையான உபகரங்கள் வழங்குதல் உடற்கல்வி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க ஆவண செய்வதாக அறிவித்திருப்பதும் வரவேற்கின்றோம்

அதே நேரத்தில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்தாமல் மாணவர்கள் சேற்கை விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை

அதாவது போதிய வகுப்பறைகள், மேம்படுத்தப்பட்ட தரை, வகுப்றைகளில் மின் விசிறிகள் மின் விளக்குகள், மாணவர்கள் உற்காந்து பயில அமர்வு மேசை மற்றும் எழுத்து மேசை போன்ற அடிப்படை வசதிகள் , அதேபோன்று ஸ்மார்ட் என்று சொல்லக்கூடிய கணினி அறைகள் , கலை அரங்கம் , காலை வழிப்பாட்டு தரை சிமெண்ட் தரையாக மேம்படுத்துதல் பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்வர் அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானம் அதற்கான உபகரணங்கள் ஏற்படுத்தி தருதல் இதையெல்லாம் மேம்படுத்தாமல் மற்றும் பயிற்றுவைக்கும் ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்ப்பட வைக்காமல் மாணவர்களின் தரம் மேம்பட வாய்ப்பு என்பது கேள்விக்குறியே

பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பத்றகு காரணம் முதலில் கட்டமைப்பு வசதி அதன்பின் கற்றல் பயிற்சி , மேற்படிப்பிற்கு சேவதற்கான பயிற்சி வகுப்புகள் அதோடு சிறப்பு பிரிவுகளும் முக்கியமாக கருதுகிறார்கள் அதாவது விளையாட்டிற்கு முக்கியத்துவம் அங்கு கபடி ,கால்பந்து , கிரிக்கெட் , ஹாக்கி, தடகளத்தில் சிறந்த பள்ளிகளா என்று பெற்றோர்கள் பள்ளிகளை தேர்வு செய்து தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் , இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மாணவர்களை பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவே ,

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் கல்வி பயில 25% விழுக்காடு மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேற்க அரசு கட்டணம் செலுத்துகிறது, இது தனியார் பள்ளிகளை தான் மேம்படுத்தும் இதனால் பனிப்படியாக அழிக்க உதவும் தவிர மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க பயன்படாது

தனியார் பள்ளிகளில் 25& விழுக்காடு செலவிடும் தொகையை செலவிட்டாலே மேற்குறிப்பட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம் , அப்படி மேம்படுத்தும் பட்சத்தில் அனைத்து தரப்பட்ட பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நாடமாட்டார்கள் அரசுப் பள்ளிகளை தான் நாடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை

அதேபோன்று ஓராண்டிற்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முன்பு புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர காலைவரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 5000கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு இல்லாதது வருத்தமும் அளிக்கிறது, வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை ரத்து மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரும் அறிவிப்பை இந்த கூட்டத் தொடரிலயே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பார் என்ற எதிர்பார்பில் காத்துக் கொண்டு இருக்கின்றோம்

சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!