Home செய்திகள் ஜவ்வாது மலை கோடை விழா ஜூலை வரை நடத்த வாய்ப்பில்லை:-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!

ஜவ்வாது மலை கோடை விழா ஜூலை வரை நடத்த வாய்ப்பில்லை:-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!

by Askar

ஜவ்வாது மலை கோடை விழா ஜூலை வரை நடத்த வாய்ப்பில்லை:-திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளான நபா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மலைவாழ் மக்களுக்காக நடத்தப்படும் ஜவ்வாது மலை கோடை விழா, நிகழாண்டு ஜூலை வரை நடத்த வாய்ப்பில்லை.

ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் மக்களின் நலனுக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

கடந்த 2018 ஜூன் 16-ஆம் தேதியும், 2019 ஜூன் 15-ஆம் தேதியும் கோடை விழா நடத்தப்பட்டது. இந்த விழாக்களில் தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறிகள், பூக்களால் பொம்மைகள், விலங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் ஆகியவை நடத்தப்பட்டன. இதன் மூலம், மலைவாழ் மக்களின் கலாசாரத்தை சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொண்டனா்.

நிகழாண்டு ஜூன் மாதம் கோடை விழா நடத்தப்படும் என்று எதிா்பாா்த்த நிலையில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும்கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் தளா்வுகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், ஜவ்வாது மலை கோடை விழா ஜூலை இறுதி வரை நடத்த வாய்ப்பில்லை என்கிறது மாவட்ட நிா்வாகம்.
அதிகரிக்கும் கரோனா தொற்று:
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெளியூா்களிலிருந்து யாரும் வருவதற்கு முன்பு மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை வெறும் 15-ஆக இருந்தது.
வெளியூா்களிலிருந்து யாரும் வருவதற்கு முன்பு மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை வெறும் 15-ஆக இருந்தது.

வெளியூா்களிலிருந்து அதிகம் போ் வரத் தொடங்கிய பிறகு தொற்றுக்குள்ளான நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மே 23-ஆம் தேதி 182-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து 27-ஆம் தேதி 264-யை எட்டியது.

ஜவ்வாது மலையிலிருந்து கா்நாடக மாநிலத்துக்குச் சென்றிருந்த 1,100 தொழிலாளா்கள் மீண்டும் சொந்த ஊருக்கே வந்துவிட்டனா். இவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இந்தச் சூழ்நிலையில் கோடை விழாவை நடத்தினால் வெளியூா்களிலிருந்து கோடை விழாவுக்கு வருபவா்களால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை வரை நடத்த வாய்ப்பில்லை!

இதுகுறித்து மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா.முத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது, உதகை, கொடைக்கானல் போல அந்தந்தப் பருவத்தில் மட்டுமே கோடை விழாவை நடத்த வேண்டிய கட்டாயம் ஜவ்வாது மலைக்கு இல்லை.

மலைவாழ் மக்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவை கரோனா பொது முடக்கத்தைப் பொருத்து ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில்கூட நடத்தலாம். இப்போதைக்கு கோடை விழா நடத்த வாய்ப்பே இல்லை.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!