Home செய்திகள் 144 ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த சாத்தனூர் அணை பூங்கா சிலைகள் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்..

144 ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த சாத்தனூர் அணை பூங்கா சிலைகள் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்..

by Askar

144 ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த சாத்தனூர் அணை பூங்கா சிலைகள் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையில் பூங்காக்கள் சீரமைப்பு பணி தொடர்ந்து தீவிரமாக செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை உள்ளது. செங்கத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலைப் பண்ணை அமைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இதன் உயரம் 119 அடியாகும். இந்த அணையால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

சாத்தனூர் அணையில் அமைந்துள்ள பூங்காவில் சிமெண்டு கலவையால் செய்யப்பட்ட அழகிய சிற்பங்கள் உள்ளன. இவைகள் இயற்கை சீற்றம் காரணமாக சேதமாகி இருந்தன.

அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் சிலை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணையில் சிலை சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. சேதமான சிலைகளை சிமெண்டு கலவையை கொண்டு சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணி நிறைவடைந்தால் பூங்கா புதுப்பொலிவு பெறும் என்று அப்பகுதி மக்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!