திருப்புல்லாணியில் கிரிக்கெட் லீக் போட்டிகள்..

திருப்புல்லாணி லீ லெவன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் 22வது ஆண்டு லீக் விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. இப்போட்டிக்கு என்.சேதுபாண்டியன் தலைமை வகித்தார். லீ லெவன்ஸ் அணியின் கேப்டன்கள் அருண், விக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியை துரைச்சாமி துவக்கி வைத்தார்.தொழிலதிபர் ரமேஷ்பாபு, முன்னாள் ஊராட்சித்தலைவர் சுப.முனியசாமி, கிருஷ்ணக்குமார், முன்னாள் கவுன்சிலர் சண்முகம்உட்பட பலர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் முதல்பரிசாக 20 ஆயிரம், இரண்டாம் பரிசு 15 ஆயிரம், மூன்றாம் பரிசு 10 ஆயிரம் வெற்றி பெற்ற அணிகளுக்குவழங்கப்பட்டது. முகம்மது ஹாலித் நன்றி கூறினார். 45 அணிகள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..