நெல்லையில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. ஆறுமுகம் மேற்பார்வையில் 06.01.2024 அன்று மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரமா, உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் மற்றும் காவலர்கள் வடக்கன்குளம், இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், Loan App மோசடிகள் குறித்தும், சமூக வலைதள பயன்பாடு குறித்தும், Online Shopping Websites வழியாக நடைபெறும் மோசடி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.