Home செய்திகள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அராஜகம் செய்யும் தலைமை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அராஜகம் செய்யும் தலைமை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

by mohan

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நீண்ட காலமாக நிலவி வந்த மருத்துவர் பற்றாக்குறை நீங்கி தற்சமயம் சுமார் 12 மருத்துவர்கள் வரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவை இப்பகுதி பொதுமக்களின் மருத்துவத் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாய் உள்ளது. இருப்பினும் இங்கு மேல் அதிகாரிகளின் அதிகாரங்களைக் காட்டிலும் இங்கு தலைமை செவிலியராய் பணிபுரியும் சந்திரா என்பவரது அதிகாரம் மேலோங்கியுள்ளது. இவரின் செய்கையால் இம்மருத்துவமனையில் பணிபுரியும் இடை நிலை ஊழியர் முதல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வரை பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்களின் வரிப்பணம் கொண்டு அமைக்கப்பட்ட பொதுமக்கள் அமரும் இருக்கைகளை எந்த அறிவிப்பின்றி மேல் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் அப்புறப்படுத்தியுள்ளார். மேலும் மருத்துவமணைக்கு மருத்துவ தேவையை எதிர்பார்த்து வரும் பொதுமக்கள் அவசர சிகிச்சை பிரிவு அருகே சற்று இளப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் அப்புறுப்படுத்தியுள்ளனர். அதே போல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எல்லா இருக்கைகளும் அகற்ற திட்டமிடபட்டுள்ளதாக செவிலியர் சந்திரா இருப்பதாக மருத்துவ மனை வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் இம் மருத்துவமனையில் பிரசவ பிரிவு, (ம) பிரசவ பண்டுவ பிரிவில் அதிக அளவில் ஊழல் நடைபெற்று வருகின்றது. இது குறித்து தலைமை செவிலியர் மீது இணை இயக்குநர் சரஸ்வதியிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரக்கூடிய நிர்வாகமே அதை இடித்து தரைமட்டமாக்கி பல மரணங்கள் நிகழ காரணமாக இருக்கப் போகும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அதிகார போதையில் ஜாதி வெறியோடு செயல்படும் செவிலியர்களின் கண்காணிப்பாளர் சந்திரன் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டும் அல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி பல முறைகேடுகளை செய்துவரும் இவரை வேறு மாவட்ட மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யவும், இவரின் மீது சுகாதார துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!