
தேனி மாவட்டத்தில் மணல் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து குற்றங்களை குறைப்பதற்காகவும் குற்றவாளிகளை திருத்துவதற்காக இனிமேல் திருட்டு தவறுகள் செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழி பாண்டு பத்திரத்தில் கையெழுத்து பெறுகின்றனர். இந்த பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கோட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோட்டாட்சியரிடம் கைது உத்தரவு பெற்று இந்திய அரசியல் சட்டம் விதி 110ன் கீழ் ஜாமீனில் வெளி வராதபடி ஓராண்டிற்கு சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில் கைது செய்யும் நபர்கள் கோர்ட்டில் 110 உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில், நிதி அரசர் 110விதியின் கீழ் சட்ட நடை முறைகளை சரியாக பின்பற்ற வில்லை என்று கூறி நீதி அரசர்கள் குற்றவாளிகளை விடுதலை செய்கின்றனர்.இதனால் இதுபோன்ற தவறுகளை திருத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வருவாய்த் துறையினர் சார்பில் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் காவல் துறையின் சார்பில் டிஎஸ்பிக்கள் ஆகியோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், தலைமை நீதித்துறை நடுவர் வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.