சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நேரில் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்திட வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து அளித்த கோரிக்கையின் அடிப்படையில் தங்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில், கால்நடைத் துறையின் மூலம் மனுவை பரிசீலனை செய்து கால்நடை மருந்தகத்தை மருத்துவ மனையாக தரம் உயர்த்திட அனைத்து சாத்தியக்கூறுகள் உள்ளது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவ மனையாக தரம் உயர்த்துவதற்காக அரசாணையை பெற்று, விரைந்து அறிவித்திட வேண்டுகிறேன் என மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். மனு அளிக்கும் நிகழ்வில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.