Home செய்திகள் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்..

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்..

by Abubakker Sithik

இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்; இயற்கை விவசாயம் குறித்து விளக்கம்..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில் மாணவ ஆசிரியர்களிடையே ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம் நடந்தது. இதில் இயற்கை விவசாயம் குறித்தும், விவசாய வளர்ச்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ. தங்கம் முன்னிலை வகித்தார் மாணவ ஆசிரியர் பர்வீன் வரவேற்றார்.

வேளாண்மை கல்லூரி திட்ட பொறுப்பாளர்கள் உதவி பேராசிரியர்கள் முனைவர் ரீபா ஜகோப், முனைவர் அரவிந்த் ஆகியோர் தலைமையில், ஹரினா, ஹீன் ஜோஷ்னா, இந்துஜா, ஐரீன் ஜெர்ரி, ஜெய் ஸ்ரீ, கௌசல்யா , பாண்டிச்செல்வி, ராகவி, சிந்து மோனிகா, சுதர்சினி ஆகியோர் காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, இயற்கை விவசாயம், பட்டுப்புழு வளர்ப்பு, மாடித்தோட்டம் மற்றும் விவசாயத்தில் வளர்ச்சி குறித்து விளக்கினர். கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி ஜெனிபர், ஹெப்சி, நூலகர் முனைவர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் அலுவலக பணியாளர் பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ருக்கையா ரூகி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com