Home செய்திகள்உலக செய்திகள் தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு..

தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு..

by Abubakker Sithik

தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தென்காசியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் நாள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனை பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி கோட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் V.M.சிவக்குமார், இ.சாமத்துரை, M.கலைச்செல்வி, P. டேவிட் ஜெயசிங், தென்காசி கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!