Home செய்திகள் வெறி நாய்க்கடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்க நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி; ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை..

வெறி நாய்க்கடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்க நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி; ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை..

by Abubakker Sithik

நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் லைசென்ஸ்; வெறி நாய்க்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை..

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை வெறிநாய்க்கடி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவரும், நெல்லை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த், வீட்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடவும், தடுப்பூசி போட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கவும், தடுப்பூசி போடப்படாத நாய்கள் ஆபத்தை விளைவிக்கும் தெருநாய்களாக கணக்கிடப்பட்டு நகராட்சி மூலம் பிடித்துச் செல்லப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தில் முதல்கட்டமாக அத்திட்டத்தை செயல்படுத்தி 82 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக புதுக்கிராமத்தில் 31 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நடுவக்குறிச்சி கால்நடை மருத்துவர் நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசிகள் போட்டனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துப்பாண்டி, வார்டு உறுப்பினர் சாமித்தாய் விஜயமணி, ஊராட்சி செயலர் மாரித்துரை, பணித்தள பொறுப்பாளர்கள் முத்துலட்சுமி, பட்டுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com