மதுரை துவரிமான் அருள்மிகு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.

மதுரை மாவட்டம் துவாிமான் கிராமம் திருவாலவாய் குருஷேத்திரமென்று பெயர் பெற்ற அருள்மிகு ஸ்ரீஈஸ்வர மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் வழங்கும் அருள்மிகு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் நடைபெற்றது.
ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்பித்தார். விழா ஏற்பாடுகளை  திருப்பணிக்குழு தலைவர் கண்ணன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நாகலிங்கம் மற்றும் துவாிமான் திருப்பணிக்குழு மற்றும் கிராமப் பொதுமக்கள்  சிறப்பாக  செய்திருந்தனர்.