Home செய்திகள் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா..

by ஆசிரியர்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்  ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்  12ல் தேரோட்டம், 14ல் திருக்கல்யாணம்.  அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தலையாய தலமாகும். இந்தியாவிலுள்ள நான்கு புண்ணிய தலங்களான இராமேஸ்வரம், துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகியவற்றில் ராமேஸ்வரம் மட்டுமே தெற்கே அமைந்துள்ள சிவ தலமாகும். இதர மூன்று தலங்கள் வடக்கே அமைந்துள்ள வைணவ தலங்கள்.

12 ஜோதிர்லிங்க தலங்களில் வடக்கே 11, தெற்கு ராமேஸ்வரமும் அமைந்துள்ளன. தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெரு¬மை உடைய இப்புண்ணிய தலம் காசிக்கு நிகராகனது. ராமர், ஈஸ்வரனை வணங்கியதால் இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என பெயர் வர காரணமாயிற்று. காசியில் மரணமே முக்தி, இராமேஸ்வரத்தை தரிசனம் செய்தால் முக்தி. ராமேஸ்வரம் ராமநாதசுவாமியை வழிபட்ட பின்னர் தான் காசி யாத்திரை நிறைவு பெறுகிறது.

இத்தகைய புனிதம் நிறைந்த இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்றுற (04/ 8/ 18) ) காலை 10: 30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்க்கரசி, கோயில் கட்டுமான பணி உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கர்கள் கண்ணன், அண்ணதுரை, பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி பாரிராஜன், மீனவர் சங்க பிரதிநிதி தேவதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். ஆக., 11 ஆடி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக்கரையில் ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்குகிறார். காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு, இரவு 8 மணிக்கு பர்வவர்த்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதியுலா வருகிறார்.

ஆகஸ்ட் 12 காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக., 15 இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பர்வவர்த்தினி அம்பாளுக்கும், ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆக., 16, 17ல் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம், ஆக., 18 மஞ்சள் நீராட்டு, சுவாமி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், ஆக., 19ல் பட்டணபிரவேஷம், ஆக., 20 காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் கெந்தமான பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!