Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் அளிந்திக்கோட்டை ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவ விழா..

இராமநாதபுரம் மாவட்டம் அளிந்திக்கோட்டை ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவ விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் அளிந்திக்கோட்டை ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவ விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் பக்தர்கள் காவடி, அக்னிசட்டி ஏந்தியும், பூ குண்டம்  இறங்கியும் நேர்த்திகடன் செலுத்தினர்!

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள அளிந்திக்கோட்டை கிராமத்தில் ஆனைமலையில்    உள்ளது போல்  ஸ்ரீ மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கிராமத்தின் வயல்வெளியில் அமைந்துள்ள இந்த கோயிலின் மாசாணி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்கள் கண்ட உண்மையாக உள்ளது. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு ஸ்ரீ மாசாணி அம்மனை வழிபட்டால் அடுத்த ஆண்டே குழந்தை வரம் கிடைக்கிறது என கோயிலுக்கு வந்த பல பக்தர்கள் நேரடியாக தெரிவிக்கின்றனர். குழந்தை வரம் கேட்டு குழந்தை கிடைத்தவுடன் மறுஆண்டில் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திகடன் செலுத்துவதை இங்கு நேரிடையாக காணமுடிகிறது.

ஸ்ரீ மாசாணி அம்மன் கோயிலின் ஆடி வெள்ளித்திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு மயான  பூஜையும், தொடர்ந்து ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆடி வெள்ளி திருவிழா நடந்தது. முக்கிய விழாவான இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமி்ன்றி, சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று கரகம் எடுத்தல், பால்குடம், பறவைக்காவடி, அக்னிச்சட்டி, ரதக்காவடி போன்றவை எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவில் ஸ்ரீ மாசாணி அம்மன் வீதிஉலா நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ மாசாணி அம்மனை வழிபட்டு சென்றனர்.

விழா ஏற்பாடுகளை கோயில்  பூசாரி மதுபாலன் தலைமையில் விழாகமிட்டியினர் செய்திருந்தனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  இங்கு வாரந்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கோவில் பூசாரி மதுபாலன் அருள் வாக்கு சொல்கிறார். இந்த அருள் வாக்கில் பங்கு கொண்ட பக்தர்கள் நினைத்த காரியங்கள் கை கூடுவதாக தெரிவித்தனர். இந்த கோவிலுக்கு இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேண்டி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!