
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மலபார் தங்க மற்றும் வைர மாளிகையின் சார்பாக இன்றைய நவீன உலகில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதா? தாழ்ந்துள்ளதா? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது.
இவ்விவாத அரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா நடுவராகவும், சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலாளர் ஹாலித் ஏ கே புஹாரி கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் தாவூத்கான், மலபார் தங்க மாளிகையின் விற்பனை பிரிவு மேலாளர் அஹமது பைசல் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விவாத அரங்கில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் செயலாளர் ஹாலித் ஏ கே புஹாரி அவர்கள் 4 கிராம் தங்கம் வழங்கி சிறப்பித்தார்கள்.
—
You must be logged in to post a comment.