Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் …

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் …

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.07.2018) தமிழ்வளர்;ச்சித்துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு அலுவலகங்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கினை துவக்கி வைத்தார்.

ஆட்சி மொழி பயிலரங்கினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மொழி என்பது சமுதாய மக்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மொழியினை கருவியாக கையாளுகிறான். நமது தமிழ்மொழியானது மிகவும் தொன்மையான இலக்கியää இலக்கண வளம் நிறைந்த மொழியாகும். ஒரு மாநிலத்தில் உள்ள அலுவலக நடைமுறைகளை செயல்படுத்த சம்மந்தப்பட்ட மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியே ஆட்சி மொழியாகும். அதனடிப்படையில் 1956-ஆம் ஆண்டு ‘தமிழ் ஆட்சிமொழி சட்டம்” நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள், அலுவலக ஆணைகள், அரசுக்கடிதங்கள், கோப்புகள், நாட்குறிப்புகள், பெயர்பலகைகள் என அனைத்தும் தமிழிலேயே இருத்தல் வேண்டும். அதேவேலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கோ அல்லது பிற மாநில அரசு அலுவலகங்களுக்கோ அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்கலாம்.

அதன்படி அனைத்துத் துறை அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்காக தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 2018-ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழி பயிரங்கம் இன்று (23.07.2018) மற்றும் நாளை(24.07.2018) என இரு நாட்கள் நடத்தப்படுகின்றன.  இப்பயிலரங்கில் மொழிபெயர்ப்பும், கலைச் சொல்லாக்கமும்; ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளிலும், மொழிப்பயிற்சி குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும், கருத்துரைகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிலரங்கில் கலந்துகொண்டுள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது அலுவலக நடைமுறைகளில் 100 சதவீதம் தமிழ்மொழியில் பின்பற்றி நமது மொழியின் சிறப்பை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர்கள் (கோயம்புத்தூர்) முனைவர்.ப.அன்புச்செழியன். (மதுரை) முனைவர்.க.பசும்பொன், இராமநாதபுரம் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மு.சம்சுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!