Home செய்திகள் இராமநாதபுரத்தில் 18 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

இராமநாதபுரத்தில் 18 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

by ஆசிரியர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்பட9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஜன., 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், தேர்வு நெருங்குவதையடுத்து மாணவர்கள் நலன் கருதி ஐன., 25க்குள் பணிக்கு திரும்புமாறு சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையும் மீறி ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர் . ஆசிரியர்கள் விவகாரத்தில் தமிழக பள்ளி கல்வி துறை துரித நடவடிக்கை எடுக்க தீர்மானித்தது. பள்ளிக்கு வராமல் போராட்டத்தை தீவிரப்படுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்றைய (ஜன., 25) போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதன்படி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 4 பேர், கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், கடலாடி, இராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம்,பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ஒரு ஆசிரியர், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் என 18 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!