Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தாய் – சகோதரியுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

தாய் – சகோதரியுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் – சகோதரியுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், நாசரத் வடலிவிளையைச் சேர்ந்த யமுனா (26) என்பவர் பிரிந்து சென்ற தனது கணவரை சேர்த்துக் வைக்க கோரி மனு அளிப்பதற்காக இன்று காலை ஆட்சியர் அலுவலகம் வந்தார். யமுனாவின் 6வயது மகன் மஞ்சூர், தாயார் கிருஷ்ணம்மாள், சகோதரி ஜெயமீனா ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர்.

அப்போது சிறுவனை ஓரு ஓரமாக அமர வைத்திவி்ட்டு, யமுனா தனது தாயர், சகோதரி ஆகிய மூவரும் தாங்கர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மூவரையும் மீட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணைக்காக அழைத்துச் சென்றார். யமுனாவின் கணவர் கார்த்திக் பசுபதி தன்னைவிட்டு பிரிந்து பெங்களூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் தனது கணவரை சேர்த்துவைக்கக் கோரி யமுனா தீக்குளிக்க முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். யமுனாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெனியானது. அதில் “கார்த்திக் பசுபதி, யமுனா ஆகிய இருவரும் சென்னையில் உள்ள பாத்திரக்கடையில் வேலைபார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கார்த்திக் தனக்கு தாய், தந்தை இல்லை அனாதை என்று கூறியுள்ளார். இதையடுத்து யமுனாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதியருக்கு 6வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் தனது மனைவியை பிரிந்து பெங்களூர் சென்றுவிட்டாராம்.விசாரணையில் பெங்களூரில் அவர் தனது தாய் – தந்தையுடன் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி  யமுனா நாசரேத் காவல் நிலையம், திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகம் உட்பட காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் -அஹமத் ஜான்

புகைப்படம் -சாதிக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!