Home செய்திகள் இராமேஸ்வரத்தில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி இரவு வரை நீடித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

இராமேஸ்வரத்தில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி இரவு வரை நீடித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

by ஆசிரியர்

இராமேஸ்வரம் அருகே வடகாடு, அரியாங்குண்டு, குடியிருப்பு ஆகிய மீனவ கிராமங்களில் அனுமதியின்றி இறால் பண்ணை கள் இயங்கி வருகின்றன. இறால் பண்ணை கழிவு நீர், கடல் மற்றும் பஞ்சகல்யாணி ஆற்றில் விடுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பண்ணை தொழிலாளர்கள் மன்னார் வளைகுடா கடலில் நூறு மீட்டர் தூரம் வரை சென்று அரியவகை பவளப்பாறைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் செயற்கை இறால் வளர்ப்பதற்கான பண்ணையை ஏழு அடி ஆழம் தோண்டியதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. கடல் வளத்திற்கு அழிவை ஏற்படுத்தும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆவேசமடைந்த வடகாடு கிராம மக்கள் இன்று மாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவ மக்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து தீவிரமடைந்த போராட்டத்தில், கடற்கரையில் கஞ்சி காய்ச்சும் போராட்டமாக மாறியது. இதனையடுத்து, நேற்று (06/7/19) மாலை வடகடல் பகுதியில் நீரோட்டம் குறைந்து பவளப்பாறைகள், சுண்ணாம்பு பாறைகள் வெளியே தெரிந்தன.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பவாளப்பாறைகள், சுண்ணாம்பு பாறைகளை சேதப்படுத்தி தண்ணீர் எடுக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் மற்றும் வனத்துறையினர் போராட்டம் நடத்தியவர்கடம் சமரசம் பேசினர். மூன்று கிராமங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி அப்பகுதியில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தை தொடர்ந்தனர். கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறுகையில், ராமேஸ்வரம் பகுதியில் சட்ட விரோதமாக 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் இயங்குகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வளம் அழிவின் விளிம்பில் உள்ளது.

இறால் பண்ணைகளை இன்று (07/7/19) மாலைக்குள் அப்புறப்படுத்துவதாக காவல், வனத்துறை அதிகாரிகள் உறுதிமொழியையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் மீண்டும் தொடரும் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!