Home செய்திகள் இராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டி நாளை துவக்கம்..

இராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டி நாளை துவக்கம்..

by ஆசிரியர்

தமிழக பள்ளி கல்வித்துறை ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான 2018 – 19 ஆம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் 11.10.18 முதல் 13.10.18 வரை, 15.10.18, 16.10.18 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி அணிகள், தடகள வீரர்கள் கலந்து கொள்ளலாம்.  போட்டி விவரங்கள்:-

14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் ஹாக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் (ஒற்றையர், இரட்டையர்), டேபிள் டென்னிஸ் (ஒற்றையர், இரட்டையர்), பேட்மின்ட்டன (ஒற்றையர், இரட்டையர்), பால் பேட் மின்ட்டன் (ஒற்றையர், இரட்டையர்) போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 11.10.18 ல் நடக்கிறது.

14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் வாலிபால், டென்னி காய்ட் (ஒற்றையர், இரட்டையர்) கபடி போட்டிகள் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 12.10.18 இல் நடக்கிறது. 14, 17, 19 வயது ஆண்கள், பெண்கள் சைக்கிள், நீளம் தாண்டுதல், 5000 , 3000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல் போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 13.10.18 இல் நடைபெறுகிறது. 14, 17, 19 வயதிற்குட்பட்ட தடகளப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 15.10.18 இல் நடக்கிறது. 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கால் பந்து போட்டி மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 16.10.18 இல் நடக்கிநது. 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கோ-கோ, எறிபந்து, ஹேண்ட் பால் போட்டிகள் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 17.10.18 இல் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கிறது என போட்டிகளுக்கான கல்வி மாவட்ட செயலாளரும், மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். கால்பந்து போட்டிக்கு 11, வாலிபால் போட்டிக்கு 10, கபடி போட்டிக்கு 13, கோ-கோ போட்டிக்கு 11, பால் பேட்மின்ட்டன் போட்டிக்கு 5, கூடைபந்து போட்டிக்கு 6, ஹாக்கி போட்டிக்கு 5, டென்னிஸ் போட்டிக்கு 4, டேபிள் டென்னிஸ் போட்டிக்கு 6, பேட்மின்ட்டன் போட்டிக்கு 6, டென்னி காய்ட் போட்டிக்கு 5, எறிபந்து போட்டிக்கு 6, ஹேண்ட் பால் போட்டிக்கு 6 பேர் என உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்ற உள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!