Home செய்திகள் குருவாயூர் சிறப்பு ரயிலுக்கு தென்காசி செங்கோட்டையில் சிறப்பான வரவேற்பு..

குருவாயூர் சிறப்பு ரயிலுக்கு தென்காசி செங்கோட்டையில் சிறப்பான வரவேற்பு..

by ஆசிரியர்

தென்காசி மற்றும் செங்கோட்டை ரயில் நிலையங்களில் மதுரை-குருவாயூர் சிறப்பு ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை குருவாயூர் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில் நேற்று பகல் 11: 20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு தென்காசி செங்கோட்டை வழியாக குருவாயூர் சென்றது. அப்போது தென்காசியில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக, ரயில் பயணிகள் நல சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குருவாயூர் ரயில் டிரைவர்களுக்கு சால்வை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் சந்திரன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, செங்கோட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர், முன்னாள் நகர் மன்ற தலைவர் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பூங்கொடி, செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி சுடலையாண்டி, தென்மலை பஞ்சாயத்து தலைவர், கடையநல்லூர் சன் சாகுல் வலசை, செங்கோட்டை கல்யாணி செந்தில், ஆறுமுகம், சேகர், சுதாகர், நவாஸ்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவை தலைவரும் தென்காசி பயணிகள் நல சங்கத் தலைவருமான என். வெங்கடேஸ்வரன், தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவர் இடைகால் செல்வசக்தி வடிவேல், தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி. கார்த்திக், மாவட்ட பிரதிநிதி பத்மநாதன் அவைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, விவசாய அணி செயலாளர் இசக்கி, முருகன், மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி ஆர்.கே. காளிதான், அன்பழகன், தலைவர் பரமசிவன், செயலாளர் சந்திரமதி, பொருளாளர் முகைதீன் வணிகர் சங்க தலைவர் பால சுப்பிரமணியன், செயலாளர் விஜய், சிங்கராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், ரசூல், கவிதா மாரியப்பன், ராஜா, கோவிந்தன், பிரேம் நசீர், குமாரசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!