மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைய, கோயிலில் மொட்டையடித்து வேண்டுதல்..

மதுரை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ மனைவிக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானதில் பேரில் அமைச்சரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ பூரண குணமடைய மதுரை அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை செய்து வருகின்றனர்.

மதுரை அடுத்துள்ள கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பன் கோயிலில் மதுரை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சோலைராஜா என்பவர் அமைச்சர் செல்லூர் ராஜூ பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என குல தெய்வத்தின் வழிபாடு செய்து முடி காணிக்கை செய்தார்.

அமைச்சர் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாகவே உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..