இராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வன்முறை, காயம் சம்பந்தப்பட்ட வழக்குகளை பொருத்தமட்டில் 2022-ம் ஆண்டு 840 வழக்குகள், 2023-ம் ஆண்டு 784 வழக்கு பதிவாகியுள்ளன் இது கடந்த ஆண்டைவிட 7% குறைவாகும். கொலை வழக்குகளை பொருத்தமட்டில் 2022-ம் ஆண்டு 33 வழக்குகள், 2023-ம் ஆண்டு 37 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 4 கொலை வழக்கு அதிகரித்திருந்தாலும், இந்த 4 வழக்குகள் குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட வழக்குகள் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பழிக்குபழி கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.சொத்து குற்ற வழக்குகளை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 323 வழக்குகளில் சொத்துகள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 222 வழக்குகளில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 10% அதிகமாகும். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பதிவான வழக்குகள் 48% குறைவாகும்.கொடுங்குற்ற வழக்கு பதிவை பொருத்தமட்டில், கடந்த 2022-ம் ஆண்டு 56 வழக்குகள், 2023-ம் ஆண்டு 36 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35% குறைவாகும். 2023-ம் ஆண்டு 84 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நடப்பாண்டு பதிவு செய்யப்பட்ட 1, 294 வாகன விபத்து வழக்குகளில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். 1,231 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விதிமீறிலில் ஈடுபட்ட 2,27,685 இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தமாக, சில்லரையாக விற்பனை செய்த 359 பேர் மீது 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 13,16,588/- மதிப்புள்ள 1,617 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,290 பேர் மீது 4,290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9,595 லிட்டர் மதுபானம், 2,829 லிட்டர் பனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 123 பேர் மீது 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39,25,630/- மதிப்புள்ள 391 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 119 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 197 பேர் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இவ்வாண்டில் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் தொடர்புடைய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.2023-ஜன.1 முதல் இந்தாள் வரை சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்ட 13 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர், பாலியல் குற்ற செயல்களில் ஈடுபட்ட ஒருவர், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட ஒருவர் என 16 பே மீது குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பாண்டு சைபர் கிரைம் தொடர்பாக 33 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 4 வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023-ன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இது வரை ரூ.2,30,55,514/- பணம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4,63,80,141 முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் பாதித்தோருக்கு ரூ.20,47,115/- திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 870 புகார் மனுக்கள் போலீஸ் இணையம் மூலம் பெறப்பட்டு இதில் 545 மனு ரசீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.45,45,159/- முடக்கப்பட்டுபாதிக்கப்பட்டோருக்கு ரூ. 12,19,833/- திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. செல்போன் மாயமானதாக பெறப்பட்ட 891 புகார்களில் 578 செல்போன் கைப்பற்றப்பட்டு உரியோரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர் பதுக்குவோர், சில்லறை மதுபானம் விற்போர்பற்றிய தகவல் தெரிந்தால், 83000 31100 என்ற எண்ணிற்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கப்போர் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும.. தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை எச்சரித்துள்ளார்.
62
You must be logged in to post a comment.