Home செய்திகள் மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்..

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்..

by ஆசிரியர்

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து 3லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 116 கிராம் எடையுள்ள அலுமினியத்தால் அலங்காரம் செய்யப்பட்ட 146 தங்க விதைகள் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவிரைுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரது மகன் பழனிசாமி (வயது 32 )என்பவரது உடமைகளை சோதனை செய்த போது கைப்பையில் உள்ள புர்கா ஆடையில் அலங்காரம் செய்யப் பட்ட அலுமினிய அலங்கார கற்களை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்ட 146 அலுமினிய மூலாம் பூசப்பட்ட சுமார் 116 கிராம் எடை மதிப்புள்ள ரூபாய் 3 லட்சத்து 71ஆயிரம் மதிப்புள்ள அலங்கார தங்க விதைகளை மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து தங்க விதைகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசரணை செய்து வருகின்றனர்.

அவர் துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்ததாக விசாரணையில் தெரிகிறது. மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!