கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் 17 வது ஆண்டு விழா மற்றும் நல திட்ட உதவிகள்..

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் 17 வது ஆண்டு விழா மற்றும் நல திட்ட உதவிகள் நிகழ்வு  பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்ஹா அருகில் அறக்கட்டளையின் நிறுவனர் MKE.உமர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழா  முகம்மது சிராஜுதீன் வரவேற்புரையுடன் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன், இராமநாதபுரம் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுத்தீன் ஆலிம் ஆகியோர் முன்னிலையில் தையல் இயந்திரம், அரிசி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் தேவையுடையோருக்கு வழங்கப்பட்டது.

பரமக்குடியை சேர்ந்த மாரியம்மாள், பழனியம்மாள்,கோமதி இவர்களுக்கு தையல் இயந்திரங்களும், மற்றவர்களுக்கு 6 ஆயிரம் கிலோ அரிசியும் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் ஆய்வாளர் காசி, கீழக்கரை SDPI கட்சியின் நிர்வாகிகள் ஹமீது பைசல், தாஜுல் அமீன், சிராஜுதீன் மற்றும் பேங்கு மரிக்கா, சாலைதெரு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக  லெப்பை தம்பி நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சிகளை கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுத்து வழங்கினார்.

செய்தி தகவல்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.

உதவிக்கரம் நீட்டுங்கள்..