மாவீரன் பகத்சிங்113 வது பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்பனந்தல் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவீரன் பகத்சிங்113 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செங்கம் தாலுக்கா செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.செ.சொர்பனந்தல் கிராமத்தில் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் வாலிபர் சங்க கொடி ஏற்றப்பட்டு கிளை துவக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் அன்பரசன் சங்க கொடி ஏற்றினார்.செங்கம் ஒன்றியத்தில் செ.சொர்பனந்தல் கிராமத்தில் காலை முதல் மாலை வரை பெரும் நெருக்கடிக்கு மத்தியில் வாலிபர் சங்க கொடி ஏற்றப்பட்டு கிளை துவக்கப்பட்டது..மாவட்ட தலைவர் தோழர் பி.சுந்தர் வாழ்த்துரை வழங்கினார்.கிளை நிர்வாகிகள் மணிகண்டன்,சேட்டு,நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்வானது சமூக விதிகளை கடைபிடித்து நடைபெற்றது

உதவிக்கரம் நீட்டுங்கள்..