Home செய்திகள் புதிய கல்விக் கொள்கைக்காக போராட்டம் வந்தால் சிறைக்குச் செல்ல தயார்’- முன்னாள் அமைச்சர் எ. வ.வேலு!

புதிய கல்விக் கொள்கைக்காக போராட்டம் வந்தால் சிறைக்குச் செல்ல தயார்’- முன்னாள் அமைச்சர் எ. வ.வேலு!

by mohan

திருவண்ணாமலை: புதிய கல்விக் கொள்கைக்காக போராட்டம் வந்தால் ஓராண்டு சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.திருவண்ணாமலை சாரோன் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் .மு.பெ.கிரி , அம்பேத்குமார் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறைந்த கலைஞரின் நினைவு தினத்தன்று, விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி தள்ளுபடி, இலவச மின்சாரம், முதல் பட்டதாரி குடும்பத்திற்கு இலவச படிப்பு உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர், கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட கழக செயலாளரும் மாண எ.வ.வேலு கூறியதாவது, “புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் வந்தால் நம் இளைஞர்கள் அனைவரும் கைத்தொழில் தான் செய்ய முடியும். எந்த அரசு வேலைக்கும் செல்ல முடியாது.குறிப்பாக, மத்திய அரசு இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு உபத்திரம் செய்து வருவதாகக்கூறி புதிய கல்விக் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் நடைமுறைக்கு வந்தால் இந்த நாட்டிற்கும், குடும்பத்திற்கும் சூனியமாகி விடும். பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். புதிய கல்விக் கொள்கைக்காக சட்டம் நிறைவேற்றி, அதற்குப் போராட்டம் வந்தால் ஓராண்டு சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளதாக” எ.வ.வேலு தெரிவித்தார்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!