
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலய சுற்றுப்புறம் அமைத்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருண் தலைமையில் நடைபெற்றது. செங்கம் ஒன்றிய தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.வேலூர் கோட்ட பொறுப்பாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது திரெளபதி அம்மன் ஆலயத்திற்கு ச. .சுற்றுப்புற சுவரை அமைக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நகர பொறுப்பாளர்கள் ராஜா, மோகன், பாண்டியன், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.