Home செய்திகள் செங்கத்தில்கொரானா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வணிகர்கள் கடையை திறக்க அனுமதி -திருவண்ணாமலை கோட்டாட்சியர் தகவல்

செங்கத்தில்கொரானா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வணிகர்கள் கடையை திறக்க அனுமதி -திருவண்ணாமலை கோட்டாட்சியர் தகவல்

by mohan

கொரானா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வணிகர்கள் கடையை திறக்க அனுமதி திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் செங்கத்தில் நடைபெற்ற அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்..திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கணேசர் திருமண மண்டப வளாகத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து வகையான வணிகர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாட்சியர் மனோகரன் தலைமை தாங்கினார். செங்கம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ, புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் மதன்குமார், செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட வெற்றிவேல் கலந்துகொண்டு பேசியதாவது வணிகர்கள் பாதுகாப்புடன் வணிகம் செய்ய வேண்டும் வியாபாரத்தின் போது வணிகர்கள் பொது மக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், எவ்வித தளர்வுகளுமின்றி, ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு,தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா விதிமுறை பின்பற்றுவதை உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் தற்போது இயங்கி வருகின்ற காய்கறி மார்க்கெட் நோய்த்தொற்று பரவல் காரணமாக புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் ஒவ்வொரு வனகரம் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே கடையைத் திறக்கலாம். நலம் அரசு விதிமுறைகளை பின்பற்றி வணிகர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் சந்திரகுமார், வணிகர் சங்க துணை செயலாளர் ஆசை முசிக் துணைத் தலைவர் முரளி செயலாளர் சுப்பிரமணி மாவட்ட துணைத்தலைவர் தாவுத் கான் செய்தி தகவல் துறை சலீம் உட்பட செங்கம் நகர அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com