Home செய்திகள் செங்கம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிணறு வெட்ட தோட்டா வைத்தபோது இரு வீடுகள் சேதம் – நிவாரணம் வழங்க கோரிக்கை.

செங்கம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிணறு வெட்ட தோட்டா வைத்தபோது இரு வீடுகள் சேதம் – நிவாரணம் வழங்க கோரிக்கை.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சின்ன பிஞ்சூர் கிராமத்தில் ராஜி கவுண்டர் என்பவரின் மகன் வேடியப்பன் . தண்டராம்பட்டு பகுதியில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு தற்போது 30 லட்சம் மதிப்பில் கட்டி வசித்து வந்த நிலையில் இவர் வீட்டிற்கு அருகாமையில் அதே பகுதியில் வசிக்கும் தர்மலிங்கம் அவருடைய மகன் கார்த்தி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஒரு கிணறு வெட்ட தோட்டா வைத்து வைத்துள்ளார். பல்வேறு ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியதன் விளைவாக வேடியப்பன் என்பவரின் வீடும் அவருக்கு அருகாமையில் உள்ள வீடும் பூமியதிர்ச்சி ஏற்பட்டு வீடுகளில் பல பகுதியில் சேதமடைந்துள்ளன. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் இதுகுறித்து உதவி வேளாண் அலுவலர் வேடியப்பன் கூறியதாவது தற்போது ஆழ்துளை கிணறு வெட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இது போன்று அனுமதி இல்லாமல் கிணறு தோட்டாவை வைப்பது வழக்கமாக வாடிக்கையாகிவிட்டது. எனது 30 லட்சம் மதிப்பிலான வீடு இந்த சம்பவத்தால் எங்களுடைய வீடும் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் சம்பத் என்பவரின் விடும் பல பகுதியில் சேதமடைந்துள்ளன. அரசு அனுமதி இல்லாமல் எப்படி செயல்படுகிறது என்று புரியாத புதிராக உள்ளது. அதிகமான குடியிருப்பு பகுதியில் கிணறு வெட்ட பல்வேறு ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்பு உயிரிழப்பு ஏற்படும் நிலையில் அரசு கண்டுகொள்ளாதது மிகவும் வேதனையாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு எங்களுக்கு தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் அரசு அனுமதி இல்லாமல் இதுபோன்ற செய்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார் மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று பொதுமக்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!