Home செய்திகள் தண்டராம்பட்டில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி- 3 அரசு அலுவலகங் கள் தற்காலிகமாக மூடல்!

தண்டராம்பட்டில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி- 3 அரசு அலுவலகங் கள் தற்காலிகமாக மூடல்!

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இறந்த முதியவர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18-ந் தேதி தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலை -செங்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொற்று ஏற்பட்டதால் அங்கு பணியாற்றும் 62 பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாலுகா அலுவலகத்தில் உள்ள 37 பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.மேலும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூல நலத்துறை அலுவலகத்தை சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com