Home செய்திகள் தரடாப்பட்டு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தரடாப்பட்டு பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உலக வன தினம் சார்பில் மரம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.பள்ளித் தலைமையாசிரியர் மு.சேகர் தலைமை தாங்கினார்.உதவி தலைமையாசிரியர் வி.இராம்மோகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி, இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் , மா.கௌசல்யா, பெ.திவ்யா ச.கார்த்திகா, இரா. சுகாசினி, மு.தீபிகா ஆகியோரின் குழு, , பள்ளி வளாகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் கனிமொழி, தலைமையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்விற்கு சாரண சாரணியர் இயக்கம், செங்கம் கல்வி மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ம. வெங்கடேஷ் வழிகாட்டுதலின்படி சாரணிய மாணவிகளும், சாரண ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சாரணிய ஆசிரியை சரண்யா, பசுமைப்படை ஆசிரியர் லட்சுமி காந்தன், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி ஆசிரியர்கள் ராமமூர்த்தி, சுமதி, பரிமளா, தீபா, பழனி உடற்கல்வி ஆசிரியர் தினகரன், சரசு ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு வேளாண்மை மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com