செங்கம் பகுதியில் நள்ளிரவில் திடீர் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் பகுதியில் இரண்டு வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்து வந்த நிலையில் தற்போது செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தனூர் வீரணம் கொழுந்தம்பட்டு தரடாப்பட்டு மேல் கரிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதனை மழை கொட்டி தீர்த்தது பருவமழை முடிந்து தற்போது பிப்ரவரி மாசம் மழை வருவது ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருப்பதாகவும் தற்பொழுது பருவமழை பொழிந்து முடிந்த பிறகு தொடர்ந்து பயிரிட்ட உளுந்து மணிலா உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு திடீரென பெய்த கனமழையால் புத்துயிர் கிடைத்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் இந்த திடீர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகின்ற கோடை காலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பகல் நேரங்களில் அதிக அளவில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது நள்ளிரவில் சுமார் 2 மணி நேரமாக பெய்த திடீர் மழையால் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்