Home செய்திகள் பல்லி மேலப்பட்டு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ திறந்து வைத்தனர்

பல்லி மேலப்பட்டு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ திறந்து வைத்தனர்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேலப்பட்டு பல்லி ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சுகாதார இணை இயக்குனர் அஜித்தா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் கர்ப்பிணி தாய்மார்கள் 10 நபர்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அம்மா மினி கிளினிக் சென்னையில் கடந்த 14ஆம் தேதி துவக்கி வைத்தார் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 39 மினி கிளிக்கும் செய்ய சுகாதார மாவட்டத்தில் 34 இடங்களில் மினி கிளினிக் ஆக மொத்தத்தில் 73 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 23 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது அம்மா மின் கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.மகேந்திரன், மாவட்ட ஆவின்பால் தலைவர் பாரி பாபு, மாவட்ட இணைச்செயலாளர் டி. பி .துரை, இணை செயலாளர் விமலாமகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் , குணசீலன் நாகப்பன் அரங்கநாதன் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கன்னியப்பன் மாணவரணி மாவட்ட செயலாளர் சுரேஷ் நாராயணன் வேலூர் மண்டல துணைச் செயலாளர் நிவாஸ் கூட்டுறவு சங்க தலைவர் சேகர் நிர்வாகிகள் பிரகாஷ் சுதாகர் மகாதேவன் வந்தவாசி ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் அண்ணா தொழிற்சங்கம் செபாஸ்டின் துரை சுருட்டல் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவர் ஷர்மிளா நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com