இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வன உயிரின காப்பாளர்களும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கீழக்கரை வனவர் கனகராஜ் கடல் சார் உயிர் இலக்கு படை வனவர் ராமச்சந்திரன் வன பாதுகாப்பு படை வனவர் சுப்பிரமணியன் மற்றும் வன பணியாளர்கள் ஆகியோர் இணைந்து கீழக்கரை அருகே இருக்கக்கூடிய நத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த தோப்பினை ஆய்வு செய்யும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பதப்படுத்திய கடல் அட்டை 600 கிலோ அவித்த நிலையில் இருந்த கடல் அட்டை 90 கிலோ மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து கீழக்கரை வன சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் பிடிபட்ட சட்ட விரோதமான பொருள்கள் சுமார் 70 லட்சம் மேல் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
You must be logged in to post a comment.