தீராத தாகம்.. தொடரும் SDPI தண்ணீர் மற்றும் சர்பத் பந்தல்..

இன்று 07-05-2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் புது கிழக்கு தெரு குட்லக் ஸ்டோர் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை கீழக்கரை காவல்நிலையம் உதவி ஆய்வாளர் வசந்த் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI கிழக்கு கிளை மற்றும் தெற்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.