Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழக அரசின் ரேஷன் நிவாரண பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு..

தமிழக அரசின் ரேஷன் நிவாரண பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு..

by ஆசிரியர்

இந்திய தேசம் முழுவதும் #கரோனா நோய் பரவலை தடுத்திட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இவ்வேளையில் மக்களின் பசிப்பிணி தீர்த்திட தமிழக அரசால் #ரூபாய்_1000 நிவாரணத் தொகையும், இரண்டு மாத ரேஷன் பொருட்களும் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படக் கூடிய பல இடங்களில் சரியான முறையில் பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாய் வந்து கொண்டிருக்கிறது. வாலிநோக்கம், கீழக்கரை, சக்கரக்கோட்டை, மண்டபம், #உச்சபுளி மற்றும் பல இடங்களில் விநியோகத்தின் போது #மக்களுக்கு_பாமாயில் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டனர் அப்போது அவர்கள் இன்னும் வரவில்லை என்று கூறுகின்றனர் சில இடங்களில் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்கு பின்னர் கிடைக்கும் என்றும் பதிலளித்திருக்கிறார்கள்.

ஏப்ரல்10 என்பது ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட நிறைவடையக்கூடிய நாளை நெருங்கி விடும். பசி பட்டினியில் மக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் பொழுது கிடைக்காத நிவாரணம், தாமதமாக கிடைப்பதில் எந்த பிரயோஜனம்.? ஏற்கனவே மக்கள் பொருளாதார நெருக்கடியால் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற #குழப்பங்களும், தாமதங்களும் மக்களை மேலும் நோகடிக்கவே செய்யும்.

ஆகவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் ஆகிய தாங்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு விடுபட்ட நிவாரண பொருட்கள் தாமதமின்றி உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு #எஸ்டிபிஐ_கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என  M.I. நூர் ஜியாவுதீன்., மாவட்ட தலைவர் – SDPI கட்சி., இராமநாதபுரம் மாவட்டம் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!