Home செய்திகள் வேடா் இன மக்களுக்கு கிடைத்தது உதவி

வேடா் இன மக்களுக்கு கிடைத்தது உதவி

by mohan

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காழியப்பநல்லூரில் வேடர் இன 10 குடும்பங்கள் குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் கூலி வேலைகள் செய்தும் வயல்களில் நண்டு, நத்தைகளை பிடித்தும் வாழ்ந்துவந்த நிலையில், கொரானா தடுப்பு நடவடிக்கையாக அரசு 144 ஊரடங்கு தடை உத்தரவு அறிவித்தது. கடந்த 10 நாட்களா வாழ்வாதாரம் இன்றி ஒரு வேலை உணவுக்காக ஏங்கிய நிலையில். இதுகுறித்து செய்தி வெளியிட்டதும். இதன் எதிரொளியாக, செய்தியை பார்த்த பல சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் தற்போது உணவுக்காக ஏங்கி தவித்த எங்கள் 10 குடும்பங்களுக்கும் உணவு, மளிகை பொருள்கள், அரிசி, அத்தியாவசிய செலவின தொகையினை வழங்கி வருகின்றனர், இதில் தரங்கம்பாடி தலைமை அசிரியர் ஜான்சைமன் சொந்த செலவில் அரிசி, மளிகை பொருள்கள் வழங்கினார். அதேபோன்று செம்பனார்கோவில் கலைமகள் கல்வி குழுமம் சார்பில் 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது. மேலும் இலுப்பூர், சங்கரன்பந்தல் இளைஞர் அணியினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். காழியப்பநல்லூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி, மளிகை பொருள்கள், அத்தியாவசிய செலவின தொகையும் வழங்கப்பட்டது. இதேபோன்று பலர் உதவி வருகின்றனர்.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை,

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com