தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆளுநரின் நடவடிக்கை என்பது வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக ஆளுநரின் நடவடிக்கை அதனை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது முதல் ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆகவே, தற்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.என்பதை வலியுறுத்தி அக்டோபர் 31 மாலை எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்- தலைமையில் வகித்தார். மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர்- வரவேற்புரை நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட செயலாளர் காஜா மைதீன்,  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் இப்றாஹீம் ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்தனர்.  மத்திய தொகுதி தலைவர் ஆரிப் கான்- நன்றியுரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் கமால் பாஷா தொகுப்புரை நிகழ்த்தினார்..

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமலும், தமிழ்நாடு சட்டமன்ற இறையாண்மையை மதிக்காமலும் தொடர்ந்து தமிழர் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி குப்புபிள்ளை தோப்பு கிளை தலைவர் இப்றாஹீம்ஷா,  யாகப்பாநகர் கிளை தலைவர் பாஷா, தெற்கு தொகுதி பொருளாளர் இப்றாகீம்- ஆகியோர் கண்டன கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்