SDPI மதுரை சார்பாக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான விருது விழாவில் “கீழை நியூஸ்” நிருபருக்கு விருது..

மதுரை SDPI கட்சி சார்பாக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியாலர்கள் என பேரிடர் காலம் மற்றும் பிற சமயங்களில் சமுதாய சேவை புரிந்தவர்களை அடையாளம் கண்டு பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதில் மதுரை மாவட்ட “கீழை நியூஸ்” நிருபர் வி.காளமேகத்துக்கு ஊடகவியல் மூலம் சிறந்த சமூக பணியாற்றிமைக்காக SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் 22/10/2020 அன்று நடைபெற்ற விழாவில் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி “ஊடகவியலாளர்களின் சிறந்த சமூக சேவகர்” என  கௌரவிக்கப்பட்டர்.

வி.காளமேகம் சிறந்த ஊடகவியலாளர் என்பதை தாண்டி சிறந்த சமூக சேவகர், ஆர்வலர்.  ஊடகத்துறையை சமுதாயத்தில் நடைபெறும் அவலத்தை சுட்டி காட்டகூடிய பலமான ஆயுதமாக கையாண்டார் என்றால் மிகையாகாது. இவரால் பல ஆதவற்றோர், முதியோர்கள் பலனடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

இவரது பணி இன்னும் சிறக்க “கீழை நியூஸ்” நிர்வாகம் வாழ்த்துகிறது.