கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

கீழக்கரை கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் இன்று 28.02.17 காலை 10.30 மணியளவில் மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகளின் ஆக்கங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியினை பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக் தலைமையேற்று நடத்தினார். அறிவியல் கண்காட்சியினை திருப்புல்லாணி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தங்க கனிமொழி, ஜமாஅத் நிர்வாகி சுஐபு ஆகியோர் துவங்கி வைத்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் குமார் வரவேற்புரையாற்றினார், சிறப்புரை முன்னாள் பள்ளியின் தாளாளர் செய்யது இப்ராஹீம், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் நிர்வாக தலைவர், நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், காரியக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.